இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கிறது.
தொடக்கம் முதலே வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கைகளையும் அறிவுரைகளையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுவருகிறார். குறிப்பாக கரோனா குறித்து மற்ற தலைவர்கள் சிந்திப்பதற்கு முன் ராகுல் காந்தி பிப்ரவரி 12ஆம் தேதியே, கரோனா பரவலால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தனது முதல் ட்வீட்டை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தற்போது 10 லட்சத்தை தாண்டிள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இது குறித்து ராகுல் காந்தி, "கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிவிட்டது. கரோனா தொற்று இதே வேகத்தில் பரவினால், ஆகஸ்ட் 10ஆம் தேதி வைரஸ் பாதிப்பு 20 லட்சத்தை எட்டிவிடும்.