கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்கு கனமழை பெய்துவருகிறது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் மலப்புரம், வயநாடு, கண்ணூர், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கேரளா வெள்ளம்: வயநாடு எம்பி ராகுல் காந்தி, மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை! - மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி
திருவனந்தபுரம்: வயநாடு வெள்ள பாதிப்புகள், நிவாரணம் குறித்து இன்று அம்மாவட்ட ஆட்சியருடன் எம்.பி. ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
கேரளா வெள்ளம்: வயநாடு எம்பி ராகுல் காந்தி, மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை!
இந்நிலையில் வயநாடு வெள்ள பாதிப்புகளை பார்வையிட அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி நேற்று விமானம் மூலம் கோழிக்கோடு வந்தார். பின்னர் வயநாடு வந்த ராகுல் காந்தி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். இதனையடுத்து இன்று வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.