தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சாத்தான்குளம் சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம்' - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம் என ராகுல் காந்தி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

ragul
ragul

By

Published : Jun 28, 2020, 8:43 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு எதிராகப் பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், 'ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்குக் காரணமான காவல் துறையின் செயலை அறிந்து வேதனை அடைகிறேன். இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம்.

கரோனா தொற்று காரணத்தினால் தான், குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடியவில்லை. இறந்த சகோதரர்களை நினைவுகூரும் அடையாளமாக இன்று இரவு மெழுகுவர்த்தி ஏற்றி உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்ததுள்ளதாக" கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details