உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , அமெரிக்காவில் உள்நாட்டினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காக வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து பணி செய்பவருக்கு வழங்கப்படும் ஹெச்-1பி, ஹெச்- 4 விசாவை இந்தாண்டு இறுதிவரை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவால் இந்திய ஐடி ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்பட பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெச்-1பி விசா நிறுத்திவைப்பு பல லட்சம் இந்தியர்களையும், அமெரிக்கா நிறுவனங்களையும் பாதிக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.