தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலக நாடக தின வாழ்த்துகள்: மோடியை கிண்டல் செய்த ராகுல்

டெல்லி: உலக நாடக தின வாழ்த்துகள் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

ராகுல் காந்தி

By

Published : Mar 27, 2019, 7:14 PM IST

நாட்டு மக்களிடையேஇன்று உரையாற்றிய மோடி, “விண்வெளி சாதனை நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியா இடம் பிடித்துள்ளது. தாழ் நீள்வட்டப் பாதையில் சென்ற செயற்கைக்கோள்சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

மிஷன் ஷக்தி என்ற பெயரிலான சோதனையை இந்தியா இன்று அரங்கேற்றியது. அது மூன்றே நிமிடங்களில் வெற்றி பெற்றது” என அறிவித்தார்.

மோடியின் இந்த உரைக்கு பாஜகவினர் பாராட்டு தெரிவித்தாலும், தேர்தல் நேரத்தில் மோடி ஸ்டண்ட் அடிக்கிறார் என எதிர்க்கட்சியினர் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு வாழ்த்துகள். பிரதமர் மோடிக்கு உலக நாடக தின வாழ்த்துகள்” என பதிவிட்டிருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details