உத்தரப் பிரதேசம் காசியபாத்தை சேர்ந்தவர் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி. தனது உறவினரான பெண் ஒருவருக்கு சிலர் தொல்லை கொடுத்துவருவதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வீட்டிற்கு அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சுடப்பட்டுள்ளார். இதனிடையே, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விக்ரம் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் உறவினர் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த அதே நபர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக பத்திரிகையாளரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது பெரும் அதிர்வலைகலை ஏற்படுத்திவரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி நடைபெற்றுவருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.