கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தற்போது பல தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது, தனது வாழ்வாதாரம் இழந்த குடிபெயர் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
இவர்களில் 90 விழுக்காட்டினருக்கு மேல் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகம், விவசாயம் போன்ற அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள். இந்த அமைப்பு சாரா தொழில்களே நாட்டின் வேலைவாய்ப்பிற்கு பெரிதும் உதவியது.
இந்நிலையில் தொழிலாளர்களில் பலர் தங்களது தொழிலைக் கைவிட்டு அவர்களது சொந்த ஊர் திரும்பியதால், நாட்டில் பல்வேறு இளைஞர்கள் ஊரடங்கு முடிவுற்ற பிறகும் வேலைவாய்ப்பினை இழக்க நேரிடும்.
இந்த அமைப்பு சாரா நிறுவனங்கள் ஊரடங்கு முடிவுற்ற பிறகு ஒன்றன்பின் ஒன்றாக சரிவை சந்தித்து நாட்டிலுள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பானது கேள்விக்குறியாகிவிடும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், நாட்டில் ஒருவருக்கு வேலை கிடைத்தால் ஆயிரம் பேர் வேலை இழக்கின்றனர். இதனால் நாட்டு மக்களுக்கு என்ன செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.