டெல்லி: நிவர் புயல் அதிதீவிரப்புயலாக நாளை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கவுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதலே மழை பெய்துவருகிறது. இந்நிலையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்றுமாறு ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
நிவர் புயல்: பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்! - நிவர் புயல்
புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திராவின் சில பகுதிகள் நிவர் புயலை எதிர்கொள்ளும் நிலையில், மக்கள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்து ட்வீட் செய்துள்ளார்.
நிவர் புயல்: பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்
அவருடைய ட்வீட்டில்," புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திராவின் சில பகுதிகள் நிவர் புயலை எதிர்கொள்ளும் நிலையில், மக்கள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றவேண்டும். உதவி தேவைப்படுவோர்களுக்கு காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் உதவவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். வீட்டிற்குள்ளே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'காரைக்கால், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 140கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்'- வானிலை ஆய்வு மையம்