உத்தரப்பிரதேச மாநிலம், காசிப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மனோஜ் சின்ஹாவை ஆதரித்து, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பரப்புரை மேற்கொண்டார்.
'ராகுல் காந்தியால் நாட்டை பாதுகாப்பாக வைக்க முடியாது..!' - அமித்ஷா தாக்கு! - Amit Shah
லக்னோ: "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் நாட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாது" என, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
அமித்ஷா
அப்போது பேசிய அவர், பாகிஸ்தானில் நடந்த பால்கோட் தாக்குதலால் ராகுல் காந்தி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் சோகமடைந்துள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சியினருக்கும், மாயாவதிக்கும் நாட்டின் பாதுகாப்பில் எந்தவித கவலையும் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், நாட்டின் பாதுகாப்பில் எந்தவித பிரச்னை வந்தால் என்னால் பார்த்து கொண்டிருக்க முடியாது என்றும் பாகிஸ்தானில் இருந்து ஒரு குண்டு வந்தால், இந்தியாவில் இருந்து இரண்டு குண்டுகள் போகும் என்றும் அவர் தெரிவித்தார்.