தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'உண்மைக்கு ஆதரவாகப் போராடாத பிரதமர்' - மோடியைத் தாக்கிய ராகுல் - காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி

டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ள ரேவா அல்ட்ரா மெகா சோலார் திட்டம் ஆசியாவில் மிகப்பெரியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதைக் குறிப்பிட்டு, உண்மைக்கு ஆதரவாக போராடுவதில் நம்பிக்கை இல்லாதவர் மோடி என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

rahul-attacks-pm-modi-over-assertion-that-solar-project-in-mps-rewa-is-asias-largest
rahul-attacks-pm-modi-over-assertion-that-solar-project-in-mps-rewa-is-asias-largest

By

Published : Jul 12, 2020, 7:52 AM IST

பிரதமர் மோடி நேற்று முன் தினம் (ஜூலை 10) காணொலி காட்சி வாயிலாக, மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, 'ரேவா நகரம் நர்மதா நதிக்கரைக்கும் வெள்ளைப் புலிகளுக்கும் அடையாளமாக காணப்பட்டது. ஆனால், இப்போது ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் கொண்டதாக மாறியுள்ளது.

500 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தலா 250 மெகாவாட் சூரிய ஒளி உற்பத்தி செய்யும் அலகுகளைக் கொண்டுள்ள, இந்தப் பூங்கா மூலம் டெல்லி மெட்ரோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கலாம்.

மீதமுள்ள 76 விழுக்காடு மின்சாரத்தை மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள நிறுவனங்களுக்கு வழங்கலாம்' என்றார்.

இதுகுறித்து பதிவிட்டிருந்த பிரதமர் அலுவலகத்தின் ட்வீட்டைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி 'அசாத்யாகிராஹி' என இந்தியில் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். இதற்கு உண்மைக்கு ஆதரவாக போராடுவதில் நம்பிக்கை இல்லாதவர் எனப் பொருள்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவரும், மாநிலத்தின் முன்னாள் எரிசக்தித் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார்., 'பிரதமர் மோடி திறந்துவைத்த 750 மெகாவாட் திறன்கொண்ட ரேவா சூரிய மின்சக்தி பூங்கா ஆசியாவின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி என்று மத்திய அரசு கூறியதற்கு மத்திய மின் அமைச்சர் பதிலளிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் டி.கே.சிவகுமார், 'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாயிரம் மெகாவாட் திறன்கொண்ட பாவகடா சூரிய மின்சக்தி பூங்கா கர்நாடகாவில் திறக்கப்பட்டது. இது ஆசியாவிலேயே திறக்கப்பட்ட மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா என்று நிரூபிக்கப்பட்டுள்ளபோது எவ்வாறு மத்திய அரசு இவ்வாறு கூற முடியும்' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details