உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்தார். அதில், காவலாளி என சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடி திருடன் என நீதிமன்றமே கூறிவிட்டது என கூறியிருந்தார்.
இதனையடுத்து பாஜக எம்பியான மீனாட்சி லேகி, ராகுல் காந்தி மீது உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் நீதிமன்ற தீர்ப்பை தனக்கு ஏற்றார் போல் திரித்து அரசியல் சாயம் பூசி, அதில் ஆதாயம் தேடியுள்ளார் என ராகுல் காந்தி மீது அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.