தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொளுந்து விட்டு எரியும் லாலு பிரசாத்தின் குடும்பப் பிரச்னை!

பாட்னா: பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் அனுப்பிய வரதட்சணையை ஏற்று கொள்ளாமால், அவரின் மனைவி அதனை திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Family
Family

By

Published : Dec 28, 2019, 2:17 PM IST

பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். இவரின் மனைவி ஐஸ்வர்யா ராய். இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், பாட்னாவிலுள்ள காவல் நிலையத்தில் தேஜ் பிரதாப் யாதவ், அவரின் தாயார் ராப்ரி தேவி ஆகியோருக்கு எதிராக தன்னை தாக்கியதாக ஐஸ்வர்யா ராய் புகார் அளித்துள்ளார். தேஜ் பிரதாப் யாதவும் ஐஸ்வர்யா ராயும் பிரிந்து வாழ்ந்துவருவதால், திருமணத்தின்போது கொடுத்த வரதட்சணையை திருப்பிக் கொடுக்குமாறு ராப்ரி தேவிக்கு ஐஸ்வர்யாவின் தாயார் பூர்ணிமா தேவி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வரதட்சணையாகப் பெற்ற அனைத்துப் பொருள்களையும் ராப்ரி தேவி திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால், திருப்பி அனுப்பிய வரதட்சணையை ஏற்க ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய பொருட்களை அனுப்பி தன்னை பிரச்னையில் சிக்க வைக்க லாலுவின் குடும்பம் முயற்சி செய்வதாக ஐஸ்வர்யா ராய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஐஸ்வர்யா ராயின் தந்தை சந்திரிகா கூறுகையில், "பொருள்களை ஏற்றி வந்த வாகனத்தில் என்ன உள்ளது, என்பது யாருக்கும் தெரியாது. அதில், சர்ச்சைக்குரிய பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளது. எங்களுக்கு தகவல் கொடுத்த பிறகு அதனை திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். பொருள்கள் குறித்த பட்டியலை மாஜிஸ்திரேட் முன்பு தயார் செய்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இதனிடையே இந்தப் பொருள்களை என்ன செய்வது என்று தெரியாமல் தான் முழித்துக் கொண்டிருப்பதாக ஓட்டுநர் கவலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆந்திராவுக்கு 3 தலைநகர் முடிவு? ஒப்புதல் அளித்ததா அமைச்சரவை?

ABOUT THE AUTHOR

...view details