தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவமனையில் தனிமைப்படுத்தபட்ட ரயில்வே ஊழியர் தற்கொலை

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

Quarantined railways worker hangs self, report comes negative
Quarantined railways worker hangs self, report comes negative

By

Published : Apr 30, 2020, 5:02 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் துண்டலா பகுதியில் ஓம் பிரகாஷ் (55) என்பவர் ரயில்வே ஊழயிராக பணிபுரிந்துவந்தார். அப்பகுதியில் மூத்த பொறியாளர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி ஓம் பிரகாஷ் உள்ளிட்ட ஏழு ரயில்வே ஊழியர்கள் ஃபிரோசாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கரோனா வைரஸ் தொற்று அவர்களுக்கு பரவியிருக்குமோ என்ற சந்தேகத்தின் பெயரில் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்நிலையில், மருத்துவ பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே ஓம் பிரகாஷ் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில், அவரது பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லைஎன முடிவு வந்துள்ளது.

தனது தற்கொலை குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அக்கடித்ததில் அவர் தனது மூத்த மகனிடம் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தனது அரசாங்க விடுதியில் படுக்கைக்கு அடியில் வைத்திருந்த 67 ஆயிரம் ரூபாய் பணத்தையும், பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த நான்காயிரம் ரூபாயையும் எடுத்துக் கொள்ளுமாறும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:பைக்கில் சுற்றிய இளைஞர்கள்... நிறுத்திய போலீஸ் மீது மிளகாய் பொடியை தூவி ஓட்டம்!

ABOUT THE AUTHOR

...view details