ஆந்திர மாநிலம் அனந்தபூரில் குத்தி கோடா மாவட்ட பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் இன்று சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. அப்போது, வகுப்பறைக்குள் மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.
வகுப்பறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு! ஓட்டமெடுத்த மாணவர்கள் - rescued
ஹைதராபாத்: அனந்தபூரில் உள்ள ஒரு பள்ளியின் வகுப்பறைக்குள் மலைப்பாம்பு நுழைந்ததால் மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.
பள்ளியில் நுழைந்த மாலைப்பாம்பு!
இதனைப் பார்த்த மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு ஆசிரியரிடம் போய் கூறியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர், பாம்பை மீட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதேபோல் ஆறு நாட்களுக்கு முன்பு தரமாவரமில் உள்ள பள்ளியில் மலைப்பாம்பு ஒன்று நுழைந்து மாணவர் ஒருவரை கடித்ததில் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.