இந்தியாவில் 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து நேற்று காலை 8 மணிக்கு மக்களவைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இந்தியா முழுவதும் தொடங்கியது. பாஜக 303 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை பிடித்தது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நீது சுட்ரன் வாலா என்பவர் ஜலந்தர் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
‘என் குடும்பமே எனக்கு வாக்களிக்கவில்லை’ - கண்ணீர் விடும் வேட்பாளர்! - சுயேட்சை வேட்பாளர்
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் நீது சுட்ரன் வாலா, தனது குடும்பத்தினரே தனக்கு வாக்களிக்கவில்லை என தன் மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
நீது சுட்ரன் வாலா
வாக்கு எண்ணிக்கையில் இவருக்கு வெறும் ஐந்து வாக்குகள் மட்டுமே மொத்தமாக கிடைத்துள்ளது. மேலும், இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, எனது குடும்பத்தில் ஒன்பது பேர் உள்ளனர். ஆனால் எனக்கு ஐந்து வாக்குகள்தான் கிடைத்துள்ளது என்று கூறி அழுதுள்ளார். இதனைத்தொடர்ந்து நீது சுட்ரன் வாலா வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டினார். தனது குடும்பத்தினரே இவருக்கு வாக்களிக்காதது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.