கரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் மக்கள் இந்த பெருந்தொற்றுக் காலத்தில் (கடந்த 20 நாட்களில்) 1 கோடி மெட்ரிக் டன் கோதுமையை உற்பத்தி செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, 35 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை விளைவிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இதற்காக விவசாயிகள், அரசு ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விவசாய மாநிலமான பஞ்சாப்பிலிருந்து நாடு முழுவதும் தேவைப்படும் 30 முதல் 35 விழுக்காடு வரையிலான கோதுமை விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 135 மெட்ரிக் டன் கோதுமையின் மதிப்பு 26 ஆயிரம் கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மே 17 வரை அம்மா உணவங்களில் இலவச உணவு