வைர வியாபாரிகள் நீரவ் மோடிக்கு கடன் அளித்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இது இரண்டாவது அடியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் தற்போது பூஷனின் பவர் & ஸ்டீல் நிறுவனம் சார்பில் பெறப்பட்ட ரூ.3800 கோடி கடன் திருப்பி செலுத்தவில்லை என்று ரீசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மற்றொரு மெகா மோசடி! - PNB
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பூஷனின் பவர் & ஸ்டீல் நிறுவனம் சார்பில் பெறப்பட்ட ரூ.3800 கோடி கடன் திருப்பி செலுத்தப்படவில்லை என்று ரீசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பூஷண் பவர் மற்றும் ஸ்டீல் இந்தியாவின் மிகவும் கடன்பட்டுள்ள நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரிசர்வ் வங்கி இந்தியாவின் புதிய திவாலா நிலைச் சட்டத்தின் கீழ் பரிந்துரைத்த முதல் 12 நிறுவனங்களில் பூஷண் பவர் மற்றும் ஸ்டீல் ஒன்றாகும்.