பஞ்சாப் மாநிலம் பிரோஜ்புர் மாவட்டத்தில் ஜஸ்பீர் சிங்(35) என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் பல வருடங்களாக மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இவரால் அந்த பழக்கத்தை விட முடியாமல் தற்கொலை முயற்சியும் செய்தார்.பிறகு, அவரை காப்பாற்றி அவரது பெற்றோர்கள் சிகிச்சை அளித்தனர்.
மதுவிற்கு அடிமை - மகனை கட்டி வைத்த பெற்றோர்! - பெற்றோர் கட்டி வைத்தனர்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மதுவிற்கு மகன் அடிமையாக இருப்பதை அறிந்த பெற்றோர், அவரை கட்டி வைத்து அப்பழக்கத்திலிருந்து விடுவிக்க முயற்சி செய்துவருகின்றனர்.
இது குறித்து ஜஸ்பீர் சிங் கூறியதாவது, "பல வருடங்களாக எனக்கு மதுப்பழக்கம் உள்ளது. நான் பல முறைகள் முயற்சித்தும் என்னால் அப்பழக்கத்தை விட முடியவில்லை. அதையடுத்து தற்கொலை செய்ய முயற்சித்தேன் ஆனால் என் பெற்றோர்கள் என்னை காப்பாற்றி சிகிச்சை அளித்தனர்" என்றார்.
இந்நிலையில் ஜஸ்பீர் சிங் தந்தை, மகன் இப்பழக்கத்தை விட வேண்டும் என்பதற்காக அவரை வீட்டிலேயே கட்டி வைத்தார். இதுபோல் கட்டி வைத்தால் மகன் மதுப்பழக்கத்தை மறந்துவிடுவார் என்று இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார். மேலும், இதேபோல் இப்பகுதியில் பல பேர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அதற்கு காரணமாக உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும், அவர்களும் அதில் இருந்து வெளிவர வேண்டும் அதற்கு காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.