தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பல்வகை பயிர் திட்டத்தைக் கையில் எடுத்த பஞ்சாப் அரசு...! - புலம்பெயர் தொழிலாளர்கள்

கரோனா வைரஸ் காரணமாக மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவும், மாநிலத்தின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காகவும் பல்வகை பயிர் திட்டத்தை பஞ்சாப் மாநில அரசு கையில் எடுத்துள்ளது.

punjab-introduce-crop-diversification-program-to-handle-water-and-labour-crisis-amid-pandemic
punjab-introduce-crop-diversification-program-to-handle-water-and-labour-crisis-amid-pandemic

By

Published : May 27, 2020, 5:33 PM IST

கரோனா வைரஸ் காரணமாக குடிபெயர் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் பல மாநிலங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இயற்கை வளங்களைக் காப்பதற்காகவும், தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவும் பஞ்சாப் மாநில அரசு பல்வகை பயிர் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் விஷ்வஜித் கண்ணா பேசுகையில், ''விவசாயிகள் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பருத்தி உற்பத்தியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 12.5 ஏக்கரில் உற்பத்தி செய்வோம். நெல் பயிர்களை விவசாயத்தை மட்டும் மேற்கொள்ளாமல் பல்வகையான விவசாயங்களை மேற்கொள்வதால் மாநிலத்தின் இயற்கை வளங்களும் பாதுக்காக்கப்படும். இதன் மூலம் நீர், மண்ணின் வளம் ஆகியவை வளர்ச்சியுறும்.

சோளம்

கரோனா வைரஸ் சூழல் காரணமாக பருத்தி உற்பத்தி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மாநிலம் முழுவதும் விவசாயத் துறையினர் சார்பாக பருத்தி உரம் மற்றும் பிடி பருத்தியின் கலப்பின விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கடந்த சீசனில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்திகளை வாங்குவதற்கு இந்திய பருத்தி கார்ப்பரேஷன் முன்வந்துள்ளன. ஏற்கனவே அதன் சார்வாக 19 மார்க்கெட்கள் திறக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் சார்பாக இந்த ஆண்டில் சோளம் உற்பத்தியை அதிகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

இதையும் படிங்க:நேருவின் 56ஆவது நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details