மகாராஷ்டிரா மாநிலம் புனேயிலுள்ள தனியார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் 45 வயதான செவிலியர் ஒருவர், புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். மேலும் கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த செவிலியருடன் பணிபுரிந்த 30 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து மருத்துவர் பாதரே கூறுகையில், “கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட செவிலியரின் உடல் நிலை சீராக உள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
நாட்டிலேயே கோவிட்-19 பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1,426 பேர் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு 127 ஆக உள்ளது. நாடு முழுக்க கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எட்டு ஆயிரத்து 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' குறித்து அறிவோம்!