புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதில் சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வைத்திலிங்கம் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனால் விதிகளின்படி அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அவர் வகித்து வந்த சட்டப்பேரவைத் தலைவர் பதவியும் காலியானது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய சபநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜுன் 3ஆம் தேதி நடைபெறும் என்றும், சபாநாயகர் பதவிக்கு பெயரை பரிந்துரை செய்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் சட்டப்பேரவைச் செயலர் அலுவலகத்தில் மனுக்களை அளிக்க வேண்டும் எனவும் சட்டப்பேரவை செயலர் நேற்று அறிவித்திருந்தார்.