புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நாராயணசாமி தொண்டர்களைச் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் நலத்திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளார் என்பதை காங்கிரஸ் கட்சி மக்களிடம் எடுத்துக் கூறியதை மக்கள் ஏற்றுக்கொண்டு காமராஜ் நகர் தொகுதியில் ஜான்குமாரை வெற்றி பெற வைத்துள்ளனர். காமராஜ் நகர் வெற்றி இமாலய வெற்றியாகும்.