புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக, ராஜ்நிவாசில் (ஆளுநர் மாளிகை) தகுந்த இடைவெளி கடைப்பிடித்து ஆளுநர் கிரண்பேடி ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனை தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவேற்றினார்.
கிரண்பேடி ஆளுநராகப் பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவு!
புதுச்சேரி: துணைநிலை ஆளுநராகப் பதவியேற்று நான்கு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, கிரண்பேடி ஆளுநர் மாளிகை ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.
kiranbedi
அந்தப் புகைப்படத்தில், கடந்த முறை குடியரசுத் தலைவர் ஆளுநர் மாளிகைக்கு வந்தபோது, எடுத்த புகைப்படத்தின் பேனரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மக்களுக்குச் சேவையாற்ற தன்னை ஆளுநராக்கிய குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க:துணைநிலை ஆளுநரின் செயல்பாடு பூஜ்ஜியம் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தடாலடி