தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்' - விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பைச் செயல்படுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சி

By

Published : Jul 30, 2020, 2:25 AM IST

புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் எதிரே இன்று (ஜூலை 29) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அக்கட்சியின் முதன்மைச் செயலர் தேவ. பொழிலன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ”புதுச்சேரியில் 2016ஆம் ஆண்டு பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மேல்நிலை கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பைச் செயல்படுத்த வேண்டும். முதுநிலை கல்வி பயில்வதற்கான வருமான உச்ச வரம்பை முற்றிலுமாக நீக்க வேண்டும். திருமண உதவித்தொகை ரூ.75 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும்” என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details