புதுச்சேரி, தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரமான விளை நிலங்களை பண்படுத்தி ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், புதுச்சேரி மாநில விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் இன்று புதுச்சேரி தேசிய பஞ்சாலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - Farmers protest against Hydrocarbon
புதுச்சேரி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
விவசாய தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கதிரொளி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.