தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காமராஜர் நகர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் சார்பில் 11 பேர் விருப்ப மனு

புதுச்சேரி: காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முதலமைச்சரின் டெல்லி பிரதிநிதி, காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு கொடுத்தனர்.

புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத் தலைவர்

By

Published : Sep 23, 2019, 10:42 PM IST

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து விருப்ப மனுக்களை பெறும் பணி அக்கட்சி தலைமை அலுவலகத்தில் காலை தொடங்கியது. விருப்பமனுவை மாநில காங்கிரஸ் துணைத் தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ் ஆகியோரிடம் அளிக்கலாம் என காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் அறிவித்திருந்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத் தலைவர்

அதனடிப்படையில் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜெயக்குமார், முதலமைச்சரின் டெல்லி பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் உழவர்கரை நகராட்சி துணைத்தலைவர் தமிழ்செல்வி உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை தேர்தல் பொறுப்பாளர்களிடம் அளித்தனர். மொத்தம் 11 பேர் விருப்ப மனு அளித்துள்ளதாக தேர்தல் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து கட்சி அலுவலகத்திற்கு வந்த மாநிலத் தலைவர், அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளவர்கள் தொடர்பாக வேட்பாளர்களை பரிசீலனை செய்ய 25ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோருடன் டெல்லி செல்லவுள்ளதாகவும், அதிமுக, பாஜக ,என்.ஆர்.காங்கிரஸ் என எந்த கட்சி எதிர்த்து நின்றாலும் எதிர்கொள்ள தயார் என்று கூறிய அவர் தலைமைதான் வேட்பாளரை அறிவிக்கும் என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details