தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தனியார்மயமாக்கப்படும் மின் விநியோகம் : மின் ஊழியர்கள் ஆர்பாட்டம் - eb sector privatization in puducherry

புதுச்சேரி : மின் விநியோகம் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 puducherry eb workers protest against eb sector privatization
puducherry eb workers protest against eb sector privatization

By

Published : Sep 14, 2020, 1:18 PM IST

இந்திய யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியார்மயமாக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

மத்திய அரசின் இந்த முடிவு புதுச்சேரி அரசின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளது, எனவே இந்த முடிவை ஏற்க முடியாது என்று புதுச்சேரி அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இதற்கிடையே மத்திய அரசின் இந்த அறிவிப்பைக் கண்டித்து புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மின் துறை பொறியாளர்களும் தொழிலாளர்களும் தனியார்மயமாக்குதலை எதிர்க்கும் போராட்டக்குழு சார்பில் மின்துறை தலைமை அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details