தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’புதுச்சேரிக்கு ஆளுநர் பதவியே தேவையில்லை’ - திருமாவளவன் - கிரண்பேடி

புதுச்சேரி: ஆளுநர் பதவியே தேவையில்லை என்றும், கிரண்பேடியை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

chief
chief

By

Published : Jan 9, 2021, 3:46 PM IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி நேற்றும் இன்றும் பங்கேற்றார். இப்போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி, பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது பேசிய திருமாவளவன், “மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் கிரண்பேடியை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் ஆளுநர் பதவியே தேவையில்லை. ஆளுநர் பதவிகளே வீண். கிரண்பேடியை திருப்தி படுத்த வேண்டும் என்றால், மோடி வீட்டிலேயே ஒரு இருக்கையை போட்டு கொடுங்கள்.

’புதுச்சேரிக்கு ஆளுநர் பதவியே தேவையில்லை’ - திருமாவளவன்

அன்னா ஹசாரேவுடன் ஊழலை ஒழிக்கப் போராடிய நேர்மையான அதிகாரியான கிரண்பேடி, எந்த அடிப்படையில் பாஜகவில் இனணந்தார். அப்போதே அவரது முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது. அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து வந்தவர்” என்றார்.

இப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், அமைச்சர் கந்தசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நேரம், இடம் ஒதுக்குங்கள்; நான் வருகிறேன்; - ஆ.ராசா மீண்டும் சவால்!

ABOUT THE AUTHOR

...view details