புதுச்சேரி, ஏனாம் பிராந்திய பகுதியைச் சேர்ந்தவர் ரேவந்த். இவர் கடந்த பிப்ரவரி மாதம் அகில இந்திய இருசக்கர வாகன சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கிடையே கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தது. இதனால், அவர் மணிப்பூர் மாநிலத்தில் சிக்கிக் கொண்டார்.
இதையடுத்து, அவர் அங்கிருந்து ஊர் திரும்ப முடியாமல் உணவின்றியும் தங்குவதற்கு இடம் இல்லாமலும் தவிர்த்தார். இது குறித்து அம்மாநில அரசிடம் தெரிவித்தும் உதவி ஏதும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ரேவந்த் புதுச்சேரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளரும் துணை வட்டாட்சியருமான செந்தில்குமாரை தொடர்பு கொண்டார்.
அவர் இந்த இளைஞரை பற்றி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்றார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அருண் இதுகுறித்து மணிப்பூர் மாநில மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு ஏனாம் பகுதியைச் சேர்ந்த ரேவந்த் என்ற இளைஞருக்கு உடனடியாக தங்க இடமும் உணவும் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கோரினார்.
நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட இளைஞர் அதனடிப்படையில், மணிப்பூர் மாநில மாவட்ட ஆட்சியர் ரேவந்துக்கு இலவசமாக அரசு இடத்தில் தங்குவதற்கும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரேவந்த் இன்று மாவட்ட ஆட்சியருக்கும், துணை வட்டாட்சியருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குணம்