புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம், இதுவரை மூன்று லட்சத்து 69 ஆயிரத்து 543 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து நின்ற என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி கேசவ், இரண்டு லட்சத்து 2 ஆயிரத்து 631 வாக்குகள் பெற்றுள்ளார். இன்னும் எண்ணப்படாத ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 631 வாக்குகள் எண்ணப்படவுள்ளன. மேலும் எண்ணப்படாத வாக்குகள் அனைத்தையும் பெற்றாலும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை வீழ்த்த முடியாது என்பதால் வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.
புதுச்சேரியிலும் வென்ற திமுக, காங்கிரஸ் கூட்டணி! - puducherry congress won
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி கேசவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
புதுச்சேரி திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் (68). இவர் இரண்டு முறை புதுச்சேரி முதலமைச்சராக இருந்துள்ளார். புதுச்சேரி மடுகரை கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தையும் முதலமைச்சராக இருந்துள்ளார். அவர் பெயர் வெங்கடசுப்பா ரெட்டியார். பாரம்பரிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம், காமராஜர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சபாநாயகராக பதவி வகித்தவர். தற்போது மக்களவைத் தேர்தலையொட்டி அப்பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.