தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பதவியை ராஜினாமா செய்யும் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்!

புதுச்சேரி: காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம், இன்று தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி
புதுச்சேரி

By

Published : Jan 25, 2021, 9:13 AM IST

காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த அமைச்சர் நமச்சிவாயம், பாஜகவில் சேர இருப்பதாக கடந்த சில நாள்களாக பேசப்பட்டு வந்தது. அவரும் தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாள்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.

கிடைத்த தகவலின்படி, நாளை மறுநாள் (ஜன.27) டெல்லி செல்லும் அமைச்சர் நமச்சிவாயம், பாஜக தலைவர் நாட்டாவை சந்தித்து கட்சியில் இணைகிறார். பின்னர், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இணைவதற்கு முன்னதாக, தனது பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தார்.

அதன்படி, இன்று (ஜன.25) பிற்பகலில் முதலமைச்சர் நாராயணசாமியைச் சந்தித்து தனது அமைச்சர் பதவியையும், சபாநாயகர் சிவக்கொழுந்துவைச் சந்தித்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரின் திடீர் முடிவு, புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details