இந்தியா முழுவதுமுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரம், வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மூன்று மாதத்திற்கு ஒருமுறை முக்கிய அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தலைமைத் தேர்தல் அலுவலகத்தை நேரில் ஆய்வு செய்த புதுச்சேரி ஆட்சியர்! - ஆய்வு செய்த புதுவை ஆட்சியர்
புதுச்சேரி: புதுச்சேரி தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரம், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் அருண் ஆய்வு செய்தார்.
அதன்படி புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் உள்ள புதுச்சேரி தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரம், வாக்குப்பெட்டி, வாக்காளர் குறித்தான ஆவணங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அருண், துணை ஆட்சியர் சுதாகர் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.
மேலும், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்படி அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னிலையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டது பாதுகாப்பாக உள்ளதா? சிசிடிவி காட்சிகள் சரியாக வேலை செய்கிறதா என்பதை ஆய்வு செய்யும் நோக்கில் தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அறை ஆய்வு செய்யப்பட்டது.