தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கல் - புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரி: அரசின் நடமாடும் உணவகம் மூலம் பெற்ற ஒரு லட்சம் ரூபாய் நிதியை புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அம்மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கல்
புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கல்

By

Published : May 27, 2020, 8:01 PM IST

புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் கடந்த ஒரு மாதமாக அமிழ்தம் என்னும் உயர்தர மலிவுவிலை நடமாடும் உணவகத்தை தொடங்கி செயல்படுத்திவந்தது. இந்த அமிழ்தம் உணவகம் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஏழை குடும்பங்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று மலிவு விலையில் உணவினை வழங்கிவந்தது.

அவ்வாறு அமிழ்தம் திட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற ரூ.1 லட்சம் தொகையினை முதலமைச்சர் நாராயணசாமி நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண், துணை வட்டாட்சியர் செந்தில்குமார், குழுவின் உறுப்பினர்கள் சுமித்ரா, சுரேஷ், பிரவீன், சிவ சுப்பிரமணியன் ஆகியோர் முதலமைச்சரிடம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

இதையும் படிங்க:நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் - நாராயணசாமி ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details