விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர் கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மணக்குள விநாயகர் ஆலயத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
ஆர்எஸ்எஸ்காரர்களை ஆளுநராக நியமித்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது: நாராயணசாமி - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்திகள்
புதுச்சேரி: ஆர்எஸ்எஸ்காரர்களை ஆளுநராக நியமித்திருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது என்று முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்
puducherry cm Scolded bjp government
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தெலங்கானா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தமிழசைக்கு எனது வாழ்த்துகள். ஆர்எஸ்எஸ்க்காரர்களை பாஜக அப்பட்டமாக ஆளுநராக நியமித்திருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பார்கள்' என தெரிவித்தார்.