'சிறுபான்மை மக்களுக்கு தொடர்ந்து துணை நிற்போம்' - நாராயணசாமி - stands
புதுச்சேரி: சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்காக அரசு தொடர்ந்து துணை நிற்கும் என வக்பு வாரியம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாராயணசாமி
புதுச்சேரி அரசின் வக்பு வாரியம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.