புதுச்சேரி அரசு, மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்கிறது. இதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த வழிவகுத்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் நடைபெறும் மண்டல, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி 2019-ஐ கல்வித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். மேலும் மாணவர்களிடம் அவர் ஒரு படைப்பு குறித்து விளக்கங்கள் கேட்டும் ஊக்குவித்தார்.