தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: நாராயணசாமி அறிவிப்பு

By

Published : Apr 14, 2020, 12:58 PM IST

புதுச்சேரி: தேசிய ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தொடரும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

narayanasamy
narayanasamy

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியின் அனைத்துத் தொகுதிகளிலும் சேர்த்து 750 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பு

அதில் 720 பேருக்கு கரோனா அறிகுறியில்லை. 30 பேருக்கான முடிவுகள் வரவேண்டி உள்ளது. பிரதமர் அறிவித்த 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

நமது அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன. எனவே, புதுச்சேரி மாநிலத்திலும் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை கடைகள் திறந்திருக்கும். தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் தொடர்பாக மத்திய அரசு அறிவிக்கும் விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details