புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மாஹேயில் உள்ள நபரை பரிசோதித்ததில் கரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து புதுச்சேரி திரும்பியவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அகில இந்திய காங்கிரஸ் கூட்டம் காணொலி மூலம் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. வெளிமாநிலங்களில் உள்ள மாணவ, மாணவிகள் புதுச்சேரி திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென்று ஒரு தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல கோரிக்கை வைத்துள்ளனர்.