தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் - Curfew order

புதுச்சேரி: மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Puducherry chief minister video mee
Puducherry chief minister video mee

By

Published : Jun 29, 2020, 7:36 PM IST

புதுச்சேரி மாநிலத்தின் முக்கிய நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், முதலமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், என்னுடைய வீடு , அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை. இருந்தபோதிலும் சுகாதாரத்துறை என்னை ஐந்து நாட்கள் தனிமைப்படுத்த சொல்லியுள்ளது.

கிராமப்பகுதிகளில் நடமாடும் பரிசோதனை மையம் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஜிப்மர் மருத்துவமனையில் அதிகமாக பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கண்டறிவது அதிகரிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனத்தால் தற்போது கூனிச்சம்பட்டு பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. அவர்களுக்கு தேவையான பரிசோதனை, தடுப்பு மருந்துகள் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிமை படுத்தப்பட்ட பகுதியில் இருந்து சிலர் யாருக்கும் தெரியாமல் வெளியே செல்லுகின்றனர். இதனால் பலருக்கும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் மக்கள் மத்தியில் தற்போது கரோனா தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு வந்துள்ளது. கரோனா நோய் தொற்று தற்போது உச்ச நிலையை எட்டி உள்ளது. மத்திய அரசு, தமிழ்நாடு அரசின் நிலை உணர்ந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுச்சேரி காவல்துறை தற்போது வாகன ஓட்டிகளிடம் முகக்கவசம், தகுந்த இடைவெளி குறித்து விசாரிக்க வேண்டும். அதனைவிட்டுவிட்டு ஆவணங்களை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. மக்கள் தங்கள் ஜீவாதாரத்தை தேடும் வேளையில் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர தொந்தரவு செய்யக்கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 500 ரூபாய் மதிப்புடைய காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்கானிக் மாத்திரைகளை அனைத்து மக்களுக்கும் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும். அவைகளின் உயர்வு மக்கள் சுமையை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details