தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரேகட்டமாக நடக்கவிருக்கிறது. இதற்காக அதிமுகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அத்தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்த ரெங்கசாமி - நாராயணசாமி
புதுச்சேரி: மக்களவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேட்பாளராக கே.நாராயணசாமியை அக்கட்சித் தலைவர் ரெங்கசாமி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, திமுக மற்றும் அதிமுக கட்சிகளும் அக்கட்சிகளின் தலைமையில் இடம்பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்துவந்தது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடவிருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கே.நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி அறிவித்துள்ளார்.