புதுச்சேரி சட்டப்பேரவைக் குழு வளாகத்தில் நிதிநிலை அறிக்கை சம்பந்தமான துறை அமைச்சர்களுடனும், அந்தத் துறையைச் சார்ந்த அலுவலர்களுடனும் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதையடுத்து தற்போது சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் துறையின் கீழ் உள்ள அலுவலர்களுடன் நிதிநிலை அறிக்கை சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றுவருகிறது.
புதுச்சேரியில் நிதிநிலை அறிக்கை ஆலோசனைக் கூட்டம்! - Budjet Meeting
புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் துறையின் கீழ் உள்ள அலுவலர்களுடன் நிதிநிலை அறிக்கை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
BUDJET
இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், தலைமைச் செயலர் அஸ்வின்குமார், துறை செயலர்கள், துறை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.