தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் குறுவை சாகுபடிக்காக காவிரி நீர்த் திறப்பு!

புதுச்சேரி : காரைக்கால் வந்தடைந்த காவிரி நீரை புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் நெல்மணி, மலர் தூவி குறுவை சாகுபடிக்காக திறந்து வைத்தார்.

puducherry agriculture minister opens cauvery water for kharif crops
puducherry agriculture minister opens cauvery water for kharif crops

By

Published : Jun 29, 2020, 1:27 PM IST

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் 17 நாட்களுக்குப் பின்னர் இன்று புதுச்சேரி மாநிலம், காரைக்காலை வந்தடைந்தது.

இதையடுத்து காரைக்கால் நல்லம்பல் சட்ரஸ்க்கு வந்த காவிரி நீரை, கடைமடை குறுவை பாசனத்திற்காக புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் நெல்மணி, மலர் ஆகியவற்றைத் தூவி திறந்து வைத்தார்.

இந்த நீரைப் பயன்படுத்தி திருநள்ளாறு, நெடுங்காடு, டிஆர்.பட்டினம் அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள உள்ளனர்.

ஒன்பதாயிரத்து 301 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யும் காரைக்கால் விவசாயிகளுக்குத் தேவையான உரம், விதை நெல், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்தும் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையங்களில் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க :புதுச்சேரி முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கரோனா!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details