தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீனவர்கள் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கக்கோரி முதலமைச்சரிடம் மனு! - puducherry admk anbalagan

புதுச்சேரி: மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியை அனைத்து மீனவர்களுக்கும் வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி அதிமுக அன்பழகன்  புதுச்சேரி முதலமைச்சர்  புதுச்சேரி மீனவர்கள்  puducherry cm narayanasamy  மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை  puducherry admk anbalagan  மீனவர்கள் உதவித் தொகை
மீனவர்கள் அனைவரும் நிவாரண உதவி வழங்க முதலமைச்சரிடம் மனு

By

Published : Jun 24, 2020, 7:12 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரை சந்தித்த அதிமுக சட்டப்பேரவைக் கட்சி தலைவர் அன்பழகன் மனு ஒன்றை அளித்தார். அதில், "புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சுமார் 23 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியில் பயன்பெற்ற நிலையில், அரசு ஊழியர், மீன்பிடி தொழிலுக்கு சம்பந்தப்படாதவர்கள் என பலரை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, கடந்த ஆண்டு 19 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு புதுச்சேரி அரசு மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியை வழங்கியது.

கடந்த ஆண்டு தடைக்கால நிவாரண உதவி பெற்றவர்களில் முதியோர் உதவித்தொகை பெறும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த ஆண்டு தடைக்கால நிவாரண உதவி வழங்கக்கூடாது என துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் கூறி வருகிறார்.

கடந்த ஆண்டு தடைக்கால நிவாரண உதவி பெற்ற அனைவருக்கும் இந்தாண்டு தடைக்கால உதவி வழங்கப்படும் என்று நீங்கள் அளித்த உறுதி இரண்டு தினங்களுக்குள் நிறைவேறாததால் அதிமுக சார்பில் அரசையும், துணை நிலை ஆளுநரையும் கண்டித்து உப்பளம் தொகுதி மீனவர்கள் சார்பில் நியாயம் கேட்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

அதன்பிறகும் அரசு இப்பிரச்னையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் 26ஆம் தேதி ஒட்டுமொத்த மீனவ சமுதாயமும் இது தொடர்பாக பெரிய போராட்டங்கள் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளன. இதனால், புதுச்சேரி முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் சூழ்நிலை உருவாகும் எனத் தெரிகிறது. சாதாரண ஏழை மக்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்வது அரசின் கடமையாகும். அதை தவிர்த்து நடைமுறைக்கு ஒவ்வாத காரணத்தை எடுத்துக்கூறி, கடந்த காலங்களில் பெற்று வந்த நிவாரண உதவியை தற்போது வழங்க மறுப்பது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல.

இது தொடர்பாக அரசும், துணை நிலை ஆளுநரும் முரண்பாடான கருத்தைக் கொண்டிருப்பதால், உடனடியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, நிவாரண உதவி வழங்க முடிவு செய்து ஆளுநரிடம் அனுமதி வாங்கவேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:புதுச்சேரியில் ஒரேநாளில் 57 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details