உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக பல்வேறு நாடகங்கள், விழிப்புணர்வு பரப்புரைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வீல் கிளப் ஆப் புதுச்சேரி சார்பில், தாய்ப்பால் அவசியம் குறித்த விழிப்புணர்வு பரப்புரை ஆட்டோ பயணத்தினை முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகம் முன்பு, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, தாய்ப்பால் அவசியம் குறித்து புதுச்சேரி நகர், கிராமப்பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடம் தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.