கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்பாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”புதுச்சேரியில் இன்று (ஜூலை 31) புதிதாக 174 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 56 வயது மிக்க பெண், தொற்று பாதித்து கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாநிலத்தில் கரோனாவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் புதிதாக 174 பேருக்கு கரோனா - கரோனா
புதுச்சேரி: இன்று புதிதாக 174 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் புதுவை மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
corona
இன்றைய தொற்று எண்ணிக்கை 174-ஆனதையடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு 3,467ஆக அதிகரித்துள்ளது. இதில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2,095. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,323 “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள திருநங்கைகள்