கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, 'கொரோனா வைரஸ் எதிரொலியாக அரசு மருத்துவமனைகள், ஜிப்மர், தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 200 சிறப்புப் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேவையான அளவு முகக்கவசம் தயாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்களில் விழிப்புணர்வு பரப்புரைகள் செய்யப்படுகின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை! புதுச்சேரியைப் பொறுத்தளவில் இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 16 பேரில், 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி விமான நிலையம், தொடர்வண்டி நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படும் " என்றார்.
இதையும் படிங்க: விமான நிலையங்களை தாக்கும் கொரோனா: 300 கோடி அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு