புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவரின் ஆட்சியையும், கட்சியையும் எம்.எல்.ஏ. தனவேல் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் எம்.எல்.ஏ. தனவேல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கொறடா அனந்தராமன், சபாநாயகர் சிவகொழுந்துவிடம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சபாநாயகர் தன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என எம்.எல்.ஏ. தனவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எம்.எல்.ஏ. தனவேலின் முழுமையான விளக்கத்தை கேட்டறிந்த பிறகு இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து சபாநாயகர் சிவகொழுந்து, எம்.எல்.ஏ. தனவேலுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், அரசு கொறடா அனந்தராமனின் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன்பேரில் சபாநாயகர் சிவகொழுந்துவை எம்.எல்.ஏ. தனவேல் சந்தித்து பேசினார்.