வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமாக குடியேறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சட்ட விரோதமாக குடியேறிவர்களை கண்டுபிடிக்கும் வகையில், 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுபிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற புதிதாக 3.29 கோடி பேர் விண்ணப்பித்தனர். ஆனால், 2.89 கோடி பேர் இடம்பெற்றனர்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிடும் தேதி அறிவிப்பு!
டெல்லி: வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறிவர்களை அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஆகஸ்ட் 31ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மீதமுள்ளவர்களின் பெயர் இடம்பெறாததால் விண்ணப்பங்களை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 31ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அகதிகள் முகாமில் உள்ள வங்கதேச மக்களின் குழந்தைகளை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.