உலகில் உள்ள பெரும்பாலான மனிதர்களுக்கு உடலின் ஒரு அங்கமாக அலைபேசி மாறிவிட்டது. அதன் அடுத்தக்கட்ட அபாயமாக அலைபேசியில் விளையாடும் பப்ஜி என்ற விளையாட்டு அறிமுகமாகியுள்ளது. சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். இது மிக ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் வலியுறுத்திவருகின்றனர். இதற்கிடையே பப்ஜி விளையாட்டை குஜராத் அரசு தடைசெய்தது.
பாடம் தொடர்பான கேள்விக்கு பப்ஜி பற்றி எழுதிய விசித்திர மாணவன்! - கர்நாடகா
பெங்களூரு: பப்ஜி விளையாடுவது எப்படி என மாணவர் ஒருவர் தேர்வில் எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
g
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படிக்கும் முதலாமாண்டு மாணவர் ஒருவர், தனது கல்லூரி தேர்வில், பாடம் குறித்து எழுதுவதற்கு பதிலாக பப்ஜி விளையாட்டு விளையாடுவது எப்படி என்பது எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அந்த மாணவரை அவரது பெற்றோர் மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றிருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.