இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலத்தில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, 26 மணி நேர கவுன்டவுனை முடித்து இன்று 3.02 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்டில் பூமியை கண்காணிப்பதற்காக இந்தியாவின் இ.ஓ.எஸ்.01 என்ற பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோளும் அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்து மற்ற நாடுகளின் 9 செயற்கைக்கோள்களும் பல்வேறு காரணங்களுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த இ.ஓ.எஸ்.01 செயற்கைக்கோள் மூலம் புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளைத் துல்லியமாக மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.